உனைப்பாடு்ம்……
பல்லவி
உனைப் பாடும் நாளெல்லாம் நல்ல நாளே
எனையாளும் ஶ்ரீ ராமா கோசலை மைந்தனே
அனுபல்லவி
அனைத்தும் நீயே கேசவனே ரகுராமா
வினைப்பயன் தொலைந்திட வேண்டியே அனுதினமும்
சரணம்
வனமாலை சங்கு சக்கரம் கதையேந்தும்
தினகரகுலத்தோனே நாராயணன் நீயே
ஜனகனின் மகளைக் கரம் பிடித்த ராகவனே
வினதையின் புதல்வனை வாகனமாய் கொண்டவனே
No comments:
Post a Comment