கைவல்ய திவ்ய மணிரோஹண பர்வதேப்ய:
காருண்ய நிர்ஜரபய: க்ருத மஞ்ஜனேப்ய: |
காமாக்ஷி கிங்கரித ஶங்கர மானஸேப்ய-
ஸ்தேப்யோ நமோऽஸ்து தவ வீக்ஷண விப்ரமேப்ய: ||86||
कैवल्यदिव्यमणिरोहणपर्वतेभ्यः
कारुण्यनिर्झरपयःकृतमञ्जनेभ्यः ।
कामाक्षि किङ्करितशङ्करमानसेभ्य-
स्तेभ्यो नमोஉस्तु तव वीक्षणविभ्रमेभ्यः ॥86॥
ஹே காமாக்ஷி ! கைவல்ய மோக்ஷமென்ற ரத்னம் விளையும் பர்வதங்களாய் இருப்பவைகளும், கருணையாகிற மலையருவியின் ஜலத்தில் முழுகியிருப்பவைகளும், பரமசிவனுடைய மனதை உடையவைகளுமான உனது கடாக்ஷ விலாஸங்களுக்கு நமஸ்காரங்கள் !
வேடிக்கையாய்…..
பல்லவி
வேடிக்கையாய் ப்பல லீலைகள் புரிந்திடும்
வாடிக்கையுடைய காமாக்ஷியைப் பணிந்தேன்
அனுபல்லவி
நாடிய பேர்க்கருளும் கேசவன் சோதரி
பாடியுனைத் துதித்தேன் எனக்கருள்வாயென
சரணம்
வீடெனும் வைரங்கள் விளயும் மலையாய்த் திகழும்
ஓடி வரும் கருணையெனும் அருவியில் மூழ்கிடும்
ஈடிணையில்லாத சிவன் மனதைக் கவருமுன்
கடைக்கண் பார்வையை எனக்கருள வேண்டினேன்
No comments:
Post a Comment