காற்றாகி கனலாகி கடலாகினாய்,
கருவாகி உயிராகி உடலாகினாய்,
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்,
நிலமாகி பயிராகி உணவாகினாய்,
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்,
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்,
போற்றாத நாளில்லை தாயே உன்னை,
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை💞❤🙏
ஆற்றாத …….
பல்லவி
ஆற்றாத துயரெல்லாம் ஆற்றிவைக்கும் தாயே
ஊற்றாகச்சுரக்கும் உன்னருளைத் தாயேன்
அனுபல்லவி
நேற்றாகி இன்றாகி நாளக்குமாகிய
ஏற்றமிகு ஈச்வரியே கேசவன் சோதரியே
சரணம்
காற்றாகி வெளியாகி நிலம் நீர் நெருப்பாகி
மாற்றமும் மாற்றம் இல்லாத பொருளுமாகி
நேற்றும் இன்றும் நாளையுமானவளே
போற்றும் புகழும் செல்வமும் எனக்கருள்வாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் எந்தன் துணை நீயே
தோற்றம் எனக்கருளி கருவுருவானவளே
சேற்று நிலப் பயிராகி உயிரளிக்குமுனையே
போற்றாத நாளில்லை அன்னையே கருமாரியே
No comments:
Post a Comment