காமாரி நாயகியே……
பல்லவி
காமாரி நாயகியே தேவி கருமாரியே
பூமாரிப் பொழிந்துன் மலரடி பணிந்தேன்
துரிதம்
நாமகள் பூமகள் சாமரம் வீசிட
அரனயனரியும் அமரேந்திரனும்
நரசுரர் நந்தி சுக சனகாதியர்
கரம் பணிந்தேத்தும் திரிபுரசுந்தரி
அனுபல்லவி
தாமரை மலர் நாபன் கேசவன் சோதரியே
மாமறைகள் போற்றும் ஶ்ரீ லலிதாம்பிகையே
சரணம்
ஓமெனும் மந்திரத்தில் ஒளிந்திருக்கும் பொருளே
காமனுக்கருள் செய்த காமேச்வரி நீயே
பூமண்டலம் போற்றும் தாயே புவனேச்வரியே
தாமதமின்றியே எனக்கருள வேண்டினேன்
No comments:
Post a Comment