#சௌந்தர்ய_லஹரி
த்வதந்ய: பாணிப்யாம் அபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா |
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சா ஸமதிகம்
சரண்யே லோகாநாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ | | (4)
Balaji Shivam இந்த சௌந்தர்யலஹரி கருத்தை ஓட்டி புகைப்படங்கள் பகிர்ந்திருந்தார். அதையொட்டிய எனது தமிழாக்க ஸ்லோகம்
மற்றெலா தெய்வம்தங்கள் #மலர்க்கரத் தபயம் காட்ட
பற்றெலாம் நீக்கும் தாயே! உன்பாதம் அதையும் தாண்டி
#கற்பகம்போல் நல்வரமும் காலனும் கண்டொடுங்கும்
பொற்பத #அபயம் நல்கும் போதுமென் தேவையென்ன
All deities except Thee,vouchsafe protection to devotees and grant their desires by gestures of their hands. Thou alone art not given to any such external demonstration of giving boons and shelter. It is so because Thy feet are by themselves powerful to protect those in the grip of fear and grant more than what is desired by devotees.”
त्वदन्यः पाणिभ्यामभयवरदो दैवतगणः
त्वमेका नैवासि प्रकटितवराभीत्यभिनया ।
भयात् त्रातुं दातुं फलमपि च वाञ्छासमधिकं
शरण्ये लोकानां तव हि चरणावेव निपुणौ ॥ ४॥
உனையே துதித்தேன்…..
பல்லவி
உனையே துதித்தேன் திரிபுரசுந்தரி
எனையாண்டருளென மலர்ப் பதம் பணிந்து
அனுபல்லவி
நினைப்பவர்க்கருளும் கேசவன் சோதரி
வினைப்பயன் நீங்கிட பவபயம் தொலைந்திட
சரணம்
அனைத்து தெய்வங்களும் அபயகரம் காட்டி
தனை வணங்கு மடியார்க்கு வரம் பல அளித்திட
உனைப் பணிவோர்க்குன் திருவடிச் சரணமே
அனைத்தையுமளிப்பது வியப்பில்லை யென்றே
No comments:
Post a Comment