ஆடி ஸ்பெஷல் !ஸ்ரீ ஆதிசங்கரரின் அகிலாண்டேஸ்வரி அக்ஷரமாலிகா !
1.அத்வாதீதபதே அலங்க்ருதசிவே அர்த்தாந்தரர்தேபரே அத்யர்தே அமலாசயே அதிதயே அர்தேந்து பூஷோஜ்ஜ்வலே அத்யக்ஷே அமராங்கநா பரிவ்ருதே அத்யாத்ம வித்யாமயே அவ்யக்தே அசலாதி ராஜதநயே வந்தே அகிலாண்டேச்வரி II
அவாஅறு திருவே, சிவா அலங்காரி,
அறிபொருள் எலா முறைவளே,
அகண்டபேர் அழகே, அளவிலா அருளே,
அரைமதி அணியு மழகே,
அதிகாரி, பதிவிரதை எஜமானி, உயர்வான
ஆன்மறிவின் மேன்மை நிலையே,
அரிதே விழியறியாப் புதிரே, மலையிளவரசி –
அருளே அகிலாண்டேஸ்வரி உமையே
அத்வாக்களுக்கும் மேற்பட்ட நிலையுள்ளவளே (அத்வாக்கள் என்றால் வழிகள் - ஆகம பிரசித்தமான வர்ணம், பதம், புவனம், தத்வம், கலை, மந்த்ரம் ஆகியவையே அத்வாக்கள்) சிவனை அழகு படுத்துபவளே, எல்லாப் பொருள்களுக்கு உட்பொருளாக விளங்குபவளே, தன்னைக் காட்டிலும் மேலான தெய்வம் இல்லை என்னும்படி இருப்பவளே, பொருளனைத்தையும் கடந்தவளே, மாசற்ற இதயம் உடையவளே, மிகுந்த தயை உள்ளவளே, பிறைச் சந்திரனை அணிந்து பிரகாசிப்பவளே. தலைவியே, தேவஸ்திரீகளால் சூழப்பட்டவளே, பிரும்ம வித்யாரூபிணியே. புலப்படாதவளே (சூக்குமமாயிருப்பவளே) மலையரசன் மகளே, அகிலாண்டேச்வரியே உன்னை வணங்குகிறேன் (நமஸ்கரிக்கின்றேன்). தமிழ் பாடல் ஆசிரியர் மீ. ராஜகோபாலன்
No comments:
Post a Comment