இதுவே தருணம்…..
பல்லவி
இதுவே தருணம் எனக்கருள காமாக்ஷி
புது மலர் தூவி உன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
மதுர மொழியாளே கேசவன் சோதரி
மதியின் பிறையணிந்த மான்விழியாளே
சரணம்
எதுவும் உலகில் நடப்பதுன்னாலன்றோ
துதித்தேன் உனையே வேறு தெய்வம் எனக்கில்லை
கதி நீயே தாயே கருணைக் கடலே
சதுர் மறைகள் போற்றும் திரிபுரசுந்தரியே
No comments:
Post a Comment