எம்மாத்திரம் அம்மா…..
பல்லவி
எம்மாத்திரம் அம்மா நானுந்தன் புகழ் பாட
இம்மாநிலம் போற்றும் ஶ்ரீலலிதாம்பிகையே
அனுபல்லவி
நம்பி நாராயணன் கேசவன் சோதரி
அம்புலி பிறையணிந்த திரிபுரசுந்தரி
சரணம்
நான்கு முகம் கொண்ட பிரமனுக்கியலவில்லை
ஐந்து முகமுடைய சிவனாலும் முடியவில்லை
ஆறுமுகனவானாலும் எடுத்துரைக்க இயலவில்லை
ஆயிரம் நாவு கொண்ட சேடனும் தோற்றான்
சிம்மாசனமிட்டு இருப்பதுவோ கைலாசம்
பெம்மான் சிவனோ உன் மனம் விரும்பும் நாயகன்
உம்பரும் முனிரும் இந்திரனும் வணங்கிடும்
அம்புயம் நீயே அகில லோக நாயகியே
भवानि स्तोतुं त्वां प्रभवति चतुर्भिर्न वदनैः
प्रजानामीशानस्त्रिपुरमथनः पञ्चभिरपि ।
न षड्भिः सेनानीर्दशशतमुखैरप्यहिपतिः
तदान्येषां केषां कथय कथमस्मिन्नवसरः
No comments:
Post a Comment