ப்ரேமாம்புராஶி ஸததஸ்னபிதானி சித்ரம்
காமாக்ஷி தாவக கடாக்ஷ நிரீக்ஷணானி |
ஸன்துக்ஷயன்தி முஹுரிந்தன ராஶி ரீத்யா
மாரத்ருஹோ மனஸி மன்மத சித்ரபானும் ||78||
प्रेमाम्बुराशिसततस्नपितानि चित्रं
कामाक्षि तावककटाक्षनिरीक्षणानि ।
सन्धुक्षयन्ति मुहुरिन्धनराशिरीत्या
मारद्रुहो मनसि मन्मथचित्रभानुम् ॥78॥
O Kamaksi ! Thy Side-glance look, bathes one always with the
showers of love, frequently kindles in the mind of Siva (enemy of Cupid),
the (variegated) Cupid-fire; [kindling is by heap of dry fuel (which burns
ferociously)]; what a surprise !
காமாக்ஷீ! உனது கடாக்ஷ பார்வையானது அன்பாகிற ஜலப்ரவாஹத்தால் எப்போதும் நனைக்கப்பட்டவையாய் இருந்தும், மன்மத சத்ருவான பரமசிவனின் மனதில் காமாக்னியை விருத்தி செய்வதில் விறகுக் குவியலைப்போல் இருந்து அதை விருத்தி செய்கின்றது விந்தையல்லவா!
அன்னையே காமாக்ஷி……
பல்லவி
அன்னையே காமாக்ஷி கருணைக் கடலே
உன்னையே துதித்தேன் அருள் தருவாயே
அனுபல்லவி
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் முதலே
சென்ன கேசவன் சோதரியே மாயே
சரணம்
அன்பென்னும் ஜலதாரையான உன் கடைவிழி
மன்மதன் வைரி பரமசிவன் மனத்தில்
இன்பம் தரும் காமத்தீயைக் கிளப்பும்
வன்மையாய் எரிகின்ற விறகானது வியப்பே
No comments:
Post a Comment