Tuesday, 5 July 2022

சுந்தரி……

कामाक्षि तावककटाक्षमहेन्द्रनील- 
सिंहासनं श्रितवतो मकरध्वजस्य ।
साम्राज्यमङ्गलविधौ मुणिकुण्डलश्रीः
नीराजनोत्सवतरङ्गितदीपमाला ॥44॥ 


O Kamaksi ! Thy Side-glance is a lion-throne made of Indra-blue-

stone, personified by Cupid (who holds fish-banner); in performing the

auspicious rites of the kingdom, the splendour of ear-oranments forming

the rows of lamps, sporting the function of waving of lights (as a mark of

respect/worship); 4-44

Note: Manmatha, after seeing the beauty of the eyes of Devi in the form of

fish, chooses the banner with fish marked on it.  

காமாக்ஷி தாவககடாக்ஷ மஹேந்த்ர  நீல- ஸிம்ஹாஸனம் ச்ரித வதோ மகரத்வஜஸ்ய,

ஸாம்ராஜ்ய மங்கல விதெள மணி குண்டல ஸ்ரீ:  நீ ராஜனோத்ஸ்வதரங்கித தீபமாலா||

தேவி காமாக்ஷியின் கடாக்ஷங்கள் உயர்ந்த இந்திர நீல இரத்னங்களால்  ஆன சிம்ஹாசனத்தில் அமர்ந்து மன்மதனது ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடை பெறும். அந்த மங்களகரமான வைபவத்தில் , ரத்ன குண்டலங்களிலிருந்து வீசும் ஒளியானது தீபங்கள் அடுக்கப்பட்ட தீப ஆரத்தியாகி சுப காரியங்களில் சுழற்றப்படும் அடுக்கு தீபக்காட்சியாக விளங்குகிது.! தீபா ஹாரத்தினேன்பது கண்கொள்ளாக் காட்சியாகும் ! மன்மதன், வக்த்ரலட்சுமி பரீ வாஹ சலன்மீ நாபலோசனா என்ற சஹஸ்ரநாமம்81 வாது நாமா முகத்தின் அழகு வெள்ளத்தில் களிக்கும் மீன்களைக் கண்டதும் மீனக் கொடியோன் ஆனதால் அதுவே ஸாமராஜ்ய சிம்ஹாசனம் என்று அதை அடைகிறான். தேவி மன்மதனைக் கண்களால் உயிர்ப்பித்து, அவனிடம் பிள்ளைப் பாசத்துடன் , சிவனையும் ஜயிக்கச் செய்து, அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறாள் ! காஞ்சி சிவஜித் க்ஷேத்ரமாகும்!

           

                                                 சுந்தரி……


                                                    பல்லவி

                                     சுந்தரி காமாக்ஷியுன் ரத்தின குண்டலங்கள்

                                     விந்தையாய் ஒளிதரும் தீப  வரிசையானது

                                                     அனுபல்லவி

                                     சந்திரனின் பிறையணிந்த கேசவன் சோதரி

                                     சுந்தரமூர்த்தி  சிவபெருமான் நாயகியே                                                                                                            

                                                           சரணம்

                                     

                                     இந்திர நீலக்கல் ரத்தினங்களாய் ஜொலிக்கும்

                                     உந்தன் கயல் கண் கடைவிழியருளால்

                                     கந்தர்வ காமன் மீன் கொடியோனுயிர்த்தெழுந்து

                                     நந்தி வாகனன் சிவனை வென்றான்   

     

                                              

No comments:

Post a Comment