புதுப்பாடல்…..
பல்லவி
புதுப்பாடல் நான் பாட முதல் வரி தருவாயே
மதுரை மீனாக்ஷியே சொக்கநாதன் நாயகியே
அனுபல்லவி
பதுமநாபன் கேசவன் சோதரியே
சதுர் மறையும் சதுர்முகனும் பணிந்தேத்தும் தாயே
சரணம்
எதுகை மோனையுடன் சந்தங்கள் அமைந்து
மதுரத்தமிழ் மொழியில் இலக்கிய நயத்துடனே
இதிகாச புராண மேற்கோள்கள் ததும்பிட
குதுகலம் தருகின்ற வார்த்தைகளுடனே
No comments:
Post a Comment