ஈஸானாம் ஜகதோஸ்ய வேங்கடபதேர் விஷ்ணோ: பராம் ப்ரேயஸீம்..
தத்வக்ஷஸ்தல நித்யவாசர ஸிகாம் தத்க்ஷாந்தி ஸம்வர்த்தினீம்....
பத்மாலங்க்ருத பாணிபல்லவயுகாம் பத்மாஸனஸ்த்தாம் ஸ்ரியம்..
வாத்ஸல்யாதி குணோஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன்மாதரம்....
அனைத்து கடவுள்களுக்கும் கடவுளான அந்த ஏழுமலையில் வாழும் ஸ்ரீமன் நாராயணனாகிய வெங்கடேசருக்கு பிரியமானவளும், எப்பொழுதும் ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் உறைபவளும், திருப்தியை பெருக்குபவளும், புதிதாய் பூத்த தாமரைப் பூ போன்ற கரங்களுடன் அந்தத் தாமரை பூவிற்கே அலங்காரமாய் மென்மையான பாதங்களுடன் தாமரையில் வீற்றிருப்பவளும்,
தாய்க்கே உரித்தான அன்பு, கருணை போன்ற குணங்களுடன் விளங்கும் இந்த உலகிற்கே தாயான பத்மாவதியை வணங்குகின்றேன்.
தெய்வங்களின் தெய்வமாய்…..
பல்லவி
தெய்வங்களின் தெய்வமாய்த் திகழும் வேங்கடவன்
திருமார்பிலுறைபவளை கேசவன் ப்ரியசகியை
அனுபல்லவி
மெய்பொருளாய் விளங்கும் அலமேலுமங்கையை
பொய்யிலாதவளைத் திருமகளை அலைமகளை
சரணம்
கமலபதம் வைத்துக் கமலாசனத்திலமர்
கமலமேந்திய கமலமலர்க் கரத்தாளை
கருணை அன்பு பாசமுள்ள அன்னை
பத்மாவதியின் மலர்ப் பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment