பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை
-திருவல்லிக்கேணிக் கண்டேனே
தெள்ளிய சிங்கமாய் த்தூணினைப் பிளந்து
துள்ளி வந்தானந்தக் கேசவன் மாதவன்
அனுபல்லவி
எள்ளி நகையாடிய அரக்கனை மடி கிடத்தி
மெள்ளத் தன் நகங்களால் கீறியவன் கதை முடித்தான்
சரணம்
பள்ளியில் பயின்று வந்த பாலன் பிரகலாதன்
தெள்ளத் தெளிவாக ஆயிரம் நாமம் சொல்ல
பிள்ளையை சீறிக் கேட்டான் அரக்கனிரணியன்
உள்ளானெங்குன் நாராயணனென்றவுடன்
No comments:
Post a Comment