Thirumaliruncholai Kalyanasundara valli Thaayaar.
சௌபாக்யங்கள் வழங்கும் ஸ்துதி : --
ஸமஸ்த ஸம்பத் ஸுகதாம் மஹாஸ்ரியம்
ஸமஸ்த கல்யாணகரீம் மஹாஸ்ரியம்
ஸமஸ்த ஸௌபாக்யகரீம் மஹாஸ்ரியம்
பஜாம்யஹம் ஞானகரீம் மஹாஸ்ரியம்
- ஸ்ரீலக்ஷ்மி ஹ்ருதயம்.
I sing about Maha Lakshmi, who gives all knowledge,
Who is Maha Lakshmi, who gives all wealth and pleasure,
Who is Maha Lakshmi, who gives all auspiciousness,
And, who is Maha Lakshmi, who gives all sort of luck.
समस्त-सम्पत्सुखदां महाश्रियं
समस्त-कल्याणकरीं महाश्रियम् ।
समस्त-सौभाग्यकरीं महाश्रियं
भजाम्यहं ज्ञानकरीं महाश्रियम् ॥ ४॥
எல்லாவிதமான வளங்களையும் சந்தோஷத்தையும் அருளும் மகாலட்சுமியே நமஸ்காரம். எல்லா சுப விஷயங்களையும் வழங்கி மனமகிழச் செய்யும் மகாலட்சுமியே நமஸ்காரம். உடல் பிணிகள் எல்லாவற்றையும் அகற்றி, ஞானத்தையும் அளிக்கும் மகாலட்சுமியே நமஸ்காரம்.
ஶ்ரீ மகாலக்ஷ்மியை…..
பல்லவி
ஶ்ரீ மகாலக்ஷ்மியை நமஸ்கரித்தேன்
தூமலர் தூவி திருப்பாதம் பணிந்து
அனுபல்லவி
தாமரை மலரமர் திருவென்னும் பெயராளை
மாமறைகள் போற்றுமழகிய கடல் மகளை
சரணம்
பூமியிலனைத்து வளங்களும் மகிழ்ச்சியும்
க்ஷேமமும் நோயற்ற நல்வாழ்வும் செல்வமும்
நாமறியும் வண்ணம் ஞானமும் கல்வியும்
ஏமமுடன் நல்கிடும் கேசவன் நாயகியை
No comments:
Post a Comment