ஸம்ஸார கர்ம பரிதாபஜுஷாம் நராணாம்
காமாக்ஷி ஶீதளதராணி தவேக்ஷிதானி |
சந்த்ராத பந்தி கனசந்தன கர்தமந்தி
முக்தாகுணந்தி ஹிமவாரி நிஷேசனந்தி ||77||
காமாக்ஷீ! ஸம்ஸாரமாகிற கோடை வெப்பத்தின் தாபத்தால் தவிக்கின்ற மக்களுக்கு , உன் குளிர்ச்சி தரும் கடாக்ஷப் பார்வைகள் நிலவாகவும், கெட்டியான சந்தனக் குழம்பாகவும், முத்து மாலையாகவும், பனிஜலத்தைத் தெளித்தது போலுமிருக்கின்றன.
संसारघर्मपरितापजुषां नराणां
कामाक्षि शीतलतराणि तवेक्षितानि ।
चन्द्रातपन्ति घनचन्दनकर्दमन्ति
मुक्तागुणन्ति हिमवारिनिषेचनन्ति ॥77॥
அம்பிகையே காமாக்ஷி…..
பல்லவி
அம்பிகையே காமாக்ஷி ஏகம்பன் நாயகியே
நம்பித் துதிப்பவரின் கற்பக தருவே
அனுபல்லவி
அம்புய நாபன் கேசவன் சோதரியே
சும்ப நிசும்பரையும் மகிடனையும் மாய்த்தவளே
சரணம்
சம்சாரமென்னும் கோடை வெய்யிலில்
அம்புலியானதுன் குளிர் தரும் கடைவிழி
வெண்பனியுடன் முத்து மாலையணிந்ததுபோல்
செம்பஞ்சு சந்தனமாய் மார்பில் விளங்கிட
No comments:
Post a Comment