தேனென இனிக்கும்…….
பல்லவி
தேனென இனிக்கும் மொழி பேசும் மீனாக்ஷியே
மானின் விழியுடைய உனைத் துதித்தேனே
துரிதம்
வானுறை தேவரும் கானுறை முனிவரும்
ஏனைய கடவுளர் அனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
ஆனிறை மேய்க்கும் கேசவன் சோதரியே
மீனக்கொடி பறக்கும் மாமதுரை அரசியே
சரணம்
தானெனுமகந்தை கொண்ட அரக்கரையழித்தவளே
தீனரைக் காக்கும் சுந்தரேசன் நாயகியே
ஊனம் களைந்தென் மன இருள் நீங்கவும்
கானமியற்றியுன் புகழ் பாடுமருள் பெறவும்
No comments:
Post a Comment