ஆடிக்கிருத்திகையில்…..
பல்லவி
ஆடிக் கிருத்திகையில் முருகா உனையே
பாடித்துதித்தேன் எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
ஓடிவந்துன் பதம் பணிவோர்க்கெல்லாம்
கேடின்றி அருள் தரும் முத்துக குமரா
சரணம்
ஈடிணையில்லாத பரம் பொருள் நீயே
தேடிடுமடியார்க்கு காட்சி தரும் வேலா
வேடிக்கையாக சூரனை வதைத்தவனே
நாடினேனுன் பதம் கேசவன் மருகா
No comments:
Post a Comment