காமாக்ஷி ஶீதல க்ருபாரஸ நிர்ஜராம்ப:-
ஸம்பர்க பக்ஷ்மலருசிஸ் த்வதபாங்க மாலா |
கோபி: ஸதா புரரிபோரபிலஷ்யமாணா
தூர்வா கதம்பக விடம்பனமாதனோதி ||57||
ஹே காமாக்ஷி! உனது கடாக்ஷத்தின் வரிசையானது குளிர்ந்ததான உனது தயைரஸமென்ற நீர்வீழ்ச்சியின் ஜலத்தின் ஸம்பந்தத்தால் செழிப்பாயிருப்பதும், திரிபுர ஸம்ஹாரியான பரமசிவனுடைய கண்களால்(பசுக்களால்) எப்போதும் விரும்பப்பட்டதுமான அருகம்புல்லின் ஸமத்வத்தை அடைகிறது.
இதில் அம்பிகையின் கடாக்ஷ மாலையை ஒரு அருகம்புல் கூட்டத்திற்கு சமமாக வர்ணிக்கப்பட்டது. கடாக்ஷமானது சீதளமான கருணாரஸம் பாய்வதினால் செழிப்பாயும், எக்காலமும் சிவனுடைய கோக்களால்(கண்கள்) விரும்பப்பட்டதாயும் இருப்பதால் ,
ஸதா விழுந்து கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சியின் அருகில் இருப்பதால் செழுமையாயும், கோக்களால் (பசுக்களால் ) எப்போதும் விரும்பப்படுவதுமான அருகம்புல் வனத்திற்கு ஒப்பிடப்பட்டது!
No comments:
Post a Comment