காலாஞ்ஜன ப்ரதிபடம் கமனீய காந்த்யா
கந்தர்ப தந்த்ரகலயா கலிதானுபாவம் |
காஞ்சீ விஹார ரஸிகே கலுஷார்தி சோரம்
கல்லோலயஸ்வ மயி தே கருணாகடாக்ஷம் ||79|| கடாக்ஷ சதகம்
कालाञ्जनप्रतिभटं कमनीयकान्त्या
कन्दर्पतन्त्रकलया कलितानुभावम् ।
काञ्चीविहाररसिके कलुषार्तिचोरं
कल्लोलयस्व मयि ते करुणाकटाक्षम् ॥ ७९
காஞ்சீயில் விளையாடிக் கொண்டிருப்பதில் விருப்பமுள்ளவளே! தன்னுடைய அழகுள்ள காந்தியால் கருத்த கண்மைக்கு ஒத்ததாயும், காமசாஸ்திர ஞானத்தினால் உண்டாகும் பாவங்களோடு கூடியதும் , பாபத்தினால் தோன்றும் துன்பங்களை போக்குவதுமான உன் கருணை நிறைந்த கடைக்கண் பார்வை ஒளியை(கடாக்ஷம்) என்மீது அலைபோல் பாயும்படி செய்வாயாக!
காஞ்சியில்…..
பல்லவி
காஞ்சியில் களித்திருக்கும் காமாக்ஷி தேவியே
வாஞ்சையுடன் உன் கடைவிழி அருள் தருவாய்
அனுபல்லவி
பாஞ்ச ஜன்யமேந்தும் கேசவன் சோதரி
தீஞ்சுவையருளமுதனைத்துமளிப்பவளே
சரணம்
அஞ்சனம் தீட்டிய உன் கருவிழியிரண்டும்
பஞ்சாட்சரன் வைரி காமனின் கலைகளை
நெஞ்சத்திலூட்டி நிலைகுலையாவண்ணம்
தஞ்சமளித்து ஆண்டருள வேண்டினேன்
No comments:
Post a Comment