ஆடியில் ஆடி வரும்……..
பல்லவி
ஆடியில் ஆடி வருந்தேனே அம்பிகையே
பாடித்துதித்தேன் பாரிந்தருள் புரிவாயே
அனுபல்லவி
ஈடிணையில்லாத கேசவன் சோதரி
நாடிவரும் பக்தருக்கு நலமளிக்குமீச்வரியே
சரணம்
வேடிக்கையாகவே உலகைப் பராமரிக்கும்
வாடிக்கை கொண்டவளே ஶ்ரீ க்ருஷ்ண மாரி
கேடில் விழுச்செல்வம் நல் வாழ்வு பெறவே
தேடியுனைக் கண்டு கொண்டேன் திருமீயச்சூர் தலத்தில்
No comments:
Post a Comment