नीलोत्पलेन मधुपेन च दृष्टिपातः
कामाक्षि तुल्य इति ते कथमामनन्ति ।
शैत्येन निन्दयति यदन्वहमिन्दुपादान्
पाथोरुहेण यदसौ कलहायते च ॥54॥
நீலோத்பலேன மதுபேன ச த்ருஷ்டிபாத:
காமாக்ஷி துல்ய இதி தே கதமாமனந்தி |
ஶைத்யேன நிந்தயதி யதன்வஹமின்து பாதான்
பாதோருஹேண யதஸௌ கலஹாயதே ச ||54|
காமாக்ஷீ! உன்கடைக்கண் குளிர்ச்சியில், கரு நெய்தலுக்கு நண்பனான சந்திர கிரணங்களையும் இகழ்கிறது! வண்டுகளுக்கு நண்பனான தாமரை மலரைவிடவும் அழகுகொண்டு, அதோடும் சண்டையிடுகிறதே தினமும்! எப்படி உன் கடைக்கண் பார்வை கருநெய்தல் மலருக்கும், வண்டுக்கும் ஒப்பென்று கூறுகிறார்களோ?
கருநெய்தல் பூவும் கருவண்டும் ஒப்போநின் கண்கடைக்கு?
கருணைக் குளிர்வில் கடைக்கண் கலையோன் கதிரிகழும்
கருவண்டின் நட்பாம் கமலமும் தோற்கும் கவினுடைத்தாம்
இருந்தும் இரண்டும் இணையுன் விழிக்கெனல்
கருணைக் கடலே…..
பல்லவி
கருணைக் கடலே தாயே காமாக்ஷி
இருவினைப் பயனகலத் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
திருவாழ் மார்பன் கேசவன் சோதரி
பெருமைக்குரிய காஞ்சி மாநகர் வளர்
சரணம்
கருநெய்தல் மலர் நண்பன் சந்திரனை மற்றும்
கருவண்டின் நட்பாம் கமலமலர் தனையுமுன்
கருவிழிகள் கருணைக் குளிராலும் அழகாலும்
பெருந்தோல்வி தந்தாலும் இணையாக க்கொள்வதேன்
No comments:
Post a Comment