ஸ்ரீ காளிகா ஸ்லோகம் : ( நோய் நொடியின்றி நீண்ட வாழ்வு கிட்ட )
த்யாயேத் காலீ மஹாதேவீம்
ரத்ன ஸிம்ஹாஸநஸ்திதாம்
பத்மாஸந ஸுகாஸீநாம்
ரக்தவஸ்த்ராம் ஸதுர்புஜாம்
ஸூலம் டமருகம் ஸைவ
கபாலம் பாஸதாரிணீம்
ஏவம் த்யாயேந்து ருத்ராங்கீம்
ஸர்வகாம ப்ரஸாதினீம்
பொதுப் பொருள் :
செந்நிற வர்ணத்தில் ஆடைகள் அணிந்து தனது நான்கு திருக்கரங்களில் சூலம் ; டமருகம் ; கபாலம் ; பாசம் இவைகளை தரித்து ரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து பயங்கர தோற்றத்துடன் திருக்காட்சி தந்தருளும் காளிகா தேவியே உனக்கு நமஸ்காரம்
சிவப்பாடையணிந்தவளை…..
பல்லவி
சிவப்பாடையணிந்தவளை மகா காளியை
உவப்புடன் பணிந்தேன் பவபயம் நீங்கிட
அனுபல்லவி
சிவனிடம் கொண்டவளை கேசவன் சோதரியை
தவயோகியர் முனிவர் வணங்கிடுமீச்வரியை
சரணம்
சூலம் டமருகம் கபாலம் பாசம்
நாலும் கரங்களிலழகுடனேந்தி
ரத்தினங்களிழைத்த அரியாசனத்தில்
பத்மாசனத்தில் வீற்றிருப்பவளை
No comments:
Post a Comment