திருமுருகா…
.
பல்லவி
திருமுருகா உந்தன் திருப்பாதம் பணிந்தேன்
குருவருளும் திருவருளும் எனக்கருள வேண்டுமென
துரிதம்
சுரபதி ரதிபதி சரச்வதியின் பதி
கதியெனத் துதித்திடும் தேவசேனாபதி
அனுபல்லவி
அருமறைப் பொருளைத் தந்தைக்கு ஓதிய
குருபனே குமரா கேசவன் மருகனே
சரணம்
விருப்பமுடன் வள்ளி தெய்வானையை மணந்த
சரவணனே ஆறு படைவீடு உடையவனே
நெருப்பினை நெற்றிக் கண்ணாய் வைத்தவன் மகனே
பெரும் பிணி பவக்கடல் கடந்திட வேண்டியே
No comments:
Post a Comment