குரு பூர்ணிமா ஸ்பெஷல் !
குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை!
குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை!
குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை!
குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை!
குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை!
குருவிற்கு சமமான உயர்வுமில்லை!
சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டே இருக்கும்
'குரு' மும்மூர்த்திகளின் அவதாரம். ஆகையால் 'குரு' திருப்தி அடைந்தால் மும்மூர்த்திகள் சந்தோஷமடைவார்கள். குரு கோபித்தால் மும்மூர்த்திகளில் யாரும் காப்பாற்றமுடியாது. குருவின் கருணையினால் மனிதன் முக்தி அடைவான். குரு தன் சீடனுக்கு நல்லது, கேட்டதை தெரிவித்து நன்மார்கத்தில் செல்வதற்கு வழி காட்டுவார். அவர் ஞானஜோதி சொரூபம். அப்படிப்பட்ட குருவின் சேவையினால் மனிதனுக்கு எல்லா வளமும் கிடைத்து சத்கதி அடைவான். எவனொருவன் மிக்க பக்தியுடன், சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு !ஸ்ரீ குருப்யோ நமஹ !
குருவே அனைத்து……
பல்லவி
குருவே அனைத்து தெய்வங்களுமாவார்
குருவுக்கு நிகரென வேறெதுவுமில்லை
அனுபல்லவி
கருணையுடன் நமக்கு நல்வழி காட்டி
திருவருள் பெறச்செய்யும் கருணாமூர்த்தி
சரணம்
ஊசிவழி செல்லும் நூலைப் போலவே
ஆசி நல்வாழ்வு பெற குரு வழி செல்வோம்
நேசமுடன் நம்மை அரவணைத்துக் காக்கும்
ஈசனும் பிரமனும் கேசவனுமவரே
No comments:
Post a Comment