பிறவாதிருக்கும்…..
பல்லவி
பிறவாதிருக்கும் வரந்தர வேண்டினேன்
கறவைகள் மேய்த்திடும் கேசவனே உன்னிடம்
அனுபல்லவி
பிறந்தாலுமுனையே மறவாத மனம் வேண்டும்
அறவழி நடந்திடும் நெறிபெற வேண்டும்
சரணம்
உறவுகளனைத்தையும் அரவணைக்கும் நிலை வேண்டும்
பிறர் மனம் நோகாத வழி நடந்திட வேண்டும்
சிறந்தவனிவனென்று ஊர் சொல்ல வேண்டும்
இறந்த பின்னும் பிறர் போற்றும்படி வாழவேண்டும்
No comments:
Post a Comment