கமலக்கண்ணனுன்…..
பல்லவி
கமலக்கண்ணனுன் கமல பதம் பணிந்தேன்
கமல மலர் பூத்தது போல் மேனி எழில் கொண்டவனே
அனுபல்லவி
கமலாசனன் வணங்கும் கமலநாபனே
கமல மலர்க்கரத்தாள் செங்கமலம் நேசிக்கும்
சரணம்
கமல மலர்க் கரத்தில் சங்கு சக்கரமேந்தும்
கமல முகத்தோனே மாதவனே கேசவனே
அமரர் முனிவர் பணி ஶ்ரீமன் நாராயணனே
கமல வனம் போல் காட்சியளித்திடும்
No comments:
Post a Comment