அல்லும் பகலும்……
அல்லும் பகலும்……
பல்லவி
அல்லும் பகலும் உனைப் போற்றி நான் பாட
சொல்லும் பொருளும் எனக்கருள்வாய் ஶ்ரீராமா
அனுபல்லவி
சொல்லொன்று வில்லொன்று இல்லொன்று என்று
நல்ல பெயர் பெற்றவனே கேசவனே ரகுராமா
சரணம்
பரசுராமரின் கர்வம் தீர்த்தவனே
மரத்தின் பின் மறைந்திருந்து வாலியை வதைத்தவனே
கர தூஷணாதியரின் கதை முடித்த ராமனே
வரம் தந்து சபரிக்கு மோட்சமளித்தவனே
கல்லைக் காரிகையாய் செய்தவனே ராகவனே
புல்லை ஆயுதமாய்க் கொண்டவனே ரகுவரனே
வில்லை வளைத்தொடித்து ஜானகியை மணந்தவனே
பொல்லா அரக்கர்களை மாய்த்தவனே ஜெயராமா
No comments:
Post a Comment