தர்பாங்குரோ மகரகேதன விப்ரமாணாம்
நிந்தாங்குரோ விதளிதோத்பல சாதுரீணாம் |
தீபாங்குரோ பவதமிஸ்ர கதம்பகானாம்
காமாக்ஷி பாலயது மாம் த்வதபாங்கபாத: ||85||
दर्पाङ्कुरो मकरकेतनविभ्रमाणां
निन्दाङ्कुरो विदलितोत्पलचातुरीणाम् ।
दीपाङ्कुरो भवतमिस्रकदम्बकानां
कामाक्षि पालयतु मां त्वदपाङ्गपातः ॥85॥
காமாக்ஷியே! மன்மதனுடைய லீலைகளின் அகந்தைக்கு காரணமாய் இருப்பதும், மலர்ந்த கருநெய்தல் பூக்களின் அழகுக்கு இகழ்ச்சியை விளைவிப்பதாயும், ஸம்ஸாரமாகிற இருள் கூட்டங்களுக்கு தீபச்சுடராகவும் இருக்கும் உனது கடைக்கண் பார்வையானது என்னைக் காப்பாற்றட்டும்.
அன்னையே காமாக்ஷி ……
பல்லவி
அன்னையே காமாக்ஷி உன்னையே துதித்தேன்
என்னை ஆட்கொள்ள இதுவே தருணம்
அனுபல்லவி
சென்ன கேசவன் சோதரியே கௌரி
உன்னருளாலன்றோ உலகனைத்தும் இயங்குவது
சரணம்
மன்மதனின் அகந்தைக்குக் காரணமாயிருக்கும்
புன்னகைக்கும் கருநெய்தல் பூக்களைப் பழிக்கும்
சம்சார இருளுக்கு ஒளி விளக்காயிருக்கும்
உன்னிரு கடைக்கண் பார்வையெனக்கருளட்டும்
No comments:
Post a Comment