காமாக்ஷி கோऽபி ஸுஜனாஸ்த்வதபாங்க ஸங்கே
கண்டேன கன்தளித காளிம ஸம்ப்ரதாயா: |
உத்தம்ஸகல்பித சகோர குடும்பபோஷா
நக்தன்திவ ப்ரஸவபூ நயனா பவந்தி ||81||
कामाक्षि कोஉपि सुजनास्त्वदपाङ्गसङ्गे
कण्ठेन कन्दलितकालिमसम्प्रदायाः ।
उत्तंसकल्पितचकोरकुटुम्बपोषा
नक्तन्दिवसप्रसवभूनयना भवन्ति ॥81॥
ஹே காமாக்ஷி ! சில புண்ய சீலர்கள் உனது கடாக்ஷ பார்வையின் மகிமையால், கழுத்தில் கருநீல நிறத்தை உடையவர்களாயும், சிரோபூஷணமாக சந்திரனை உடையவர்களாகவும், இரவு பகல்களை உண்டுபண்ணும் கண்களை உடையவர்களாகவும் ஆகிறார்கள்!பரமசிவஸாரூப்யம் பெறுகிறார்கள் .
காட்சிகள் பலவிதமாய்…..
பல்லவி
காட்சிகள் பலவிதமாயருளுகின்ற காமாக்ஷி
ஆட்சி நீ செய்வதோ அழகான காஞ்சி நகர்
அனுபல்லவி
மாட்சிமை பொருந்திய கேசவன் சோதரி
மீட்சி தந்திடுவாயென் பவவினைப் பயன் நீக்கி
சரணம்
உனது கடைவிழியருளால் சில புண்ணியர்கள்
தனது கழுத்தில் கருநீல நிறம் கொண்டும்
சிரசில் சகோரம் விரும்பும் பிறையணியுடனும்
சிவரூபமாய்க் கண்ணில் பானு சந்திரரேந்தும்
No comments:
Post a Comment