ஆடி வெள்ளி ஸ்பெஷல் ! சக்தி பீடங்களில் ஒன்றென கருதப்படும் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் சமேத அகிலாண்டேச்வரீ கோயிலில் ஆடி வெள்ளி மிகவும் விசேஷமாகும்
பிரம்மணாச ஸரஸ்வத்யா
ஸ்துதாம் பங்கஜயாஸமம்
வைகுண்டேந ஸ்துதாம் தேவீம் அகிலாண்டேஸ்வரீம் பஜே
பவாப்திபாரம்நயதீம்
பவாங்க நியதாலயாம்
பவாபாய பயம் ஹந்த்ரீம் பவாநீமஹாமாஸ்ரயே
- இந்திரன் துதித்த அகிலாண்டேஸ்வரி துதி
பொதுப் பொருள்: அகிலமெல்லாம் காக்கும் அகிலாண்டேஸ்வரியே, பிரம்மா - சரஸ்வதி, மகாவிஷ்ணு - மகாலட்சுமியால் துதிக்கப்பட்டவளே, நமஸ்காரம். குடும்பத் துயர் எல்லாவற்றிலிருந்தும் காத்து என்னைக் கரையேற்றுபவள் நீயே என்தாய் என்பதை நான் பரிபூரணமாக நம்புகிறேன். துன்பங்களையும், மரண பயத்தையும் என்னிடமிருந்து விரட்டும் அன்னையே உன்னை நான் ஆராதிக்கிறேன். பரமசிவனின் பத்தினியான அகிலாண்டேஸ்வரியே உன்னைத் தூய உள்ளத்துடன் வழிபடுகிறேன்.
அகிலம் காக்கும்….
பல்லவி
அகிலம் காக்கும் அகிலாச்ணடேச்வரியை
இகபர சுகம் பெற மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
மகிடனை மாய்த்த கேசவன் சோதரியை
மகிதலம் போற்றும் திரிபுரசுந்தரியை
சரணம்
சுகசனகாதியரும் பிரமனும் சரச்வதியும்
மகாவிஷ்ணுவும் மகாலக்ஷ்மியும்
சகலரும் துதித்திடும் பரமேச்வரியை
பவபயம் களைந்திடும் தேவி பவானியை
No comments:
Post a Comment