“ஆடி ஸ்பெஷல்”
#அஞ்சலி #செய்தேன்……
பல்லவி
அஞ்சலி செய்தேன் தாயே காமாக்ஷி
அஞ்சேலென்றுந்தன் அபயகரம் காட்டு
அனுபல்லவி
கஞ்சனைக் காய்ந்த கேசவன் சோதரி
தஞ்சமடைந்துன் மலரடி பணிந்து
சரணம்
பங்கய விழிகள் முக்திக்கு வழி காட்ட
சிங்கார மிகுதியால் அழகுடன் அவை சுழல
அங்கமில் மதனை உயிரெழச்செய்யும்
மங்களம் தருமுன் கடைக்கண் விழிக்கே
* * * * *
“மூக பஞ்சசதி””கடாக்ஷ சதகம்”
कामाक्षि नित्यमयमञ्जलिरस्तु मुक्ति-
बीजाय विभ्रममदोदयघूर्णिताय ।
कन्दर्पदर्पपुनरुद्भवसिद्धिदाय
कल्याणदाय तव देवि दृगञ्चलाय ॥84॥
தேவி காமாக்ஷி! மோக்ஷத்திற்கு வித்தாய் இருப்பதும், அழகின் பெருக்கால் சுழல்வதும், அனங்கனின் அகந்தை மீண்டும் தோன்றி நிலைபெறச் செய்வதும், மங்களத்தின் உருவமாய் உள்ள உன் கடைக்கண்களுக்கு என்றென்றும் அஞ்சலி.
No comments:
Post a Comment