இந்தோர் மத்யகதாம் ம்ருங்காங்கஸத்ருச ச்சாயாம் மநோஹாரிணீம்
பாண்டூத்புல்ல ஸரோருஹாஸநகதாம் ஸ்நிக்தப்ரதீபச்சவிம் |
வர்ஷந்தீமம்ருதம் பவாநி பவதீம் த்யாயந்தி யே தேஹிந
ஸ்தே நிர்முக்தருசோ பவந்தி விபத : ப்ரோஜ்ஜந்தி தாந் தூரத : ||
ஓ பவாநி ! அன்னையே ! சரீரமெடுத்த மனிதர்கள் ; சந்தரனுடைய நடுவே தோன்றும் மானின் அவயமென அழகான காந்தியை உடையவளும், மனதை கவருகின்றவளும், வெண்ணிறம் கொண்டு நன்கு மலர்ந்த தாமரை மலரை ஆஸனமாகக் கொண்டவளும், அந்த நெருங்கிய ஒளியின் காந்தியுடையவளும், அமுதத்தைப் பொழிபவளுமான உன்னைச் சிந்தனை செய்கின்றனரோ, அவர்கள் ( பிறவிப் ) பிணியிலிருந்து விடுதலையடைகின்றனர். அவர்களுடைய துயரங்கள் யாவும் தொலைவில் விலகிச்செல்கின்றன. - கடஸ்தவ : ஸ்ரீ தேவீ பஞ்சஸ்தவீ
इन्दोर्मध्यगतां मृगाङ्कसदृशच्छायां मनोहारिणी
पाण्डूत्फुल्लसरोरुहासनगता स्निग्धप्रदीपच्छविम् ।
वर्षन्तीममृतं भवानि! भगवतीं ध्यायन्ति ये देहिन-
स्ते निर्मुक्तरुजो भवन्ति विपदः प्रोज्झन्ति तान्दूरतः ॥
மலையரசன் மகளே…….
பல்லவி
மலையரசன் மகளே தேவி பவானி
தொலைந்திடும் அவர்தம் பவப்பிணி துயர்கள்
அனுபல்லவி
அலைகடல் மீதுறங்கும் கேசவன் சோதரி
கலைமகள் அலைமகள் நேசிக்குமீச்வரி
சரணம்
நிலவின் நடுவிலுள்ள மான் போல் திகழ்பவளை
மலர்ந்த வெண் தாமரை மலர் மீதமர்ந்தவளை
ஒளிமிகுந்தவளை அமுதளிப்பவளை
களிப்புடன் மனத்திலிருத்தித் துதிப்பவர்க்கு
No comments:
Post a Comment