அம்பிகை நீயே……
பல்லவி
அம்பிகை நீயே ஆண்டருள்வாயே
நம்பியுனைத் துதித்தேன் கேசவன் சோதரியே
துரிதம்
உம்பர்கள் முனிவர்கள் தும்புரு நாரதர்
சம்பு கபாலி நான்முகன் வணங்கிடும்
அனுபல்லவி
தும்பிமுகப் பெருமான் தாயே ஈச்வரியே
அம்புலி பிறையணிந்த சாம்பவி சங்கரி
சரணம்
செம்பொன் மேனியன் சிவனிடம் கொண்டவளே
அம்புய மலரேந்தும் சிவகாமச்வரியே
வெம்பகடலினைக் கடந்திட வேண்டியே
உன் பதம் பணிந்தேன் தாயே மீனாக்ஷியே
No comments:
Post a Comment