திரிபுரசுந்தரி
பல்லவி
திரிபுரசுந்தரியின் மலர்ப் பதம் பணிந்தேன்
கணபதி முருகன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
திரிபுரமெரித்த பக்தவத்சலேச்வரன்
அருகிருந்து போற்றும் கேசவன் சோதரி
சரணம்
அருந்தவமுனிவரும் தேவரும் இந்திரனும்
திருமகள் கலைமகள் நான்முகன் மற்றும்
நந்தியும் கணங்களும் அனைவரும் வணங்கிடும்
திருக்கழுகுன்றம் தனிலுறை அன்னை
No comments:
Post a Comment