வேதகிரீஸ்வரன்
பல்லவி
வேதகிரீஸ்வரனை வேண்டித்துதித்தேன்
கழுகுக்குன்றம்தனில் நின்ற பரமேச்வரனை
அனுபல்லவி
பாதிமதி கங்கை சடையிலணிந்தவனை
ஆதிபகவனைக் கேசவன் நேசனை
சரணம்
திருநாவுக்கரசரும் ஆளுடைப்பிள்ளையும்
பெருமையுடன் பாடிப் பரவிய ஈசனை
கருநாகம் கழுத்தணிந்த சிவபெருமானை
குருவும் தந்தையும் தாயுமானவனை
No comments:
Post a Comment