மங்களாம்பிகா சமேத அகச்தீச்வரர்
பல்லவி
அகச்தீச்வரரையும் மங்களாம்பிகையையும்
அகம் குளிர்க் கண்டு உளமாரத்துதித்தேன்
அனுபல்லவி
இகபரமிரண்டிலும் சுகம் பெற வேண்டியே
சகம் புகழும் வையச்சேரி திருத்தலத்தில்
சரணம்
மகன்கள் விநாயகனும் சுப்பிரமணியனும்
சகல தேவர்களும் நந்தியும் கணங்களும்
புகழ் மிகு லக்ஷ்மி நாராயணன் கேசவனும்
மகிழ்வுடன் போற்றி கரம்பணிந்தேத்தும்
No comments:
Post a Comment