கந்தகோட்டம் கந்தன்
பல்லவி
கந்தகோட்டம் வளர் கந்தனை சுந்தரனை
சந்ததம் துதித்தேன் நற்கதி பெறவேண்டி
அனுபல்லவி
வந்தனை புரிந்திடும் பக்தருக்கெல்லாம்
முந்தைய பழவினைப் பயன்களை போக்கும்
சரணம்
நிந்தை புரிந்திடும் சூரபதுமனை
விந்தையாய் மயிலும் சேவலுமாய்ச்செய்து
சொந்தமாயருகினில் வைத்திருக்கும் வேலனை
உந்திகமலமுடை கேசவன் மருகனை
No comments:
Post a Comment