சமயமிதே
பல்லவி
சமயமிதே எனக்கருள கேசவா
அமரரும் முனிவரும் வணங்கிடும் மாதவா
அனுபல்லவி
சுமைகள் நிறைந்த இவ்வாழ்விலிருந்து
விடுதலை பெறவே உனதடி பணிந்தேன்
சரணம்
உலகமனைத்தையும் படைத்தும் காத்தும்
நிலைபெறச்செய்தும் அழித்துமாண்டிடும்
பலவிதமாக லீலைகள் புரிந்திடும்
உலகநாதனே ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment