மகாலக்ஷ்மி
பல்லவி
மகாலக்ஷ்மியின் மலர்ப்பதம் பணிந்தேன்
மகாவிஷ்ணுவின் மார்பில் கொலுவிருக்கும்
அனுபல்லவி
மகான் சங்கரர் துதித்துப்பாடிய
புவனம் போற்றும் கேசவன் நாயகி
சரணம்
மகாபாபங்கள் ரோகங்கள் நீங்கிட
சுகானுபவத்துடன் வாழ்வில் வளம் பெற
சகலரும் துதித்திடும் பொன்மகள் திருமகள்
பாற்கடல் வழங்கிய அழகிய அலைமகள்
No comments:
Post a Comment