திருமலைவையாவூர் பிரசன்னவெங்கடேசன்
பல்லவி
ஒரு முறை உனைக்காண ஓடோடி வந்தேன்
திருமலை வையாவூர் நின்றருளும் கோவிந்தா
அனுபல்லவி
திருமகள் அலமேலுமங்கையும் அனுமனும்
கருடனும் பணிந்திடும் பிரசன்ன வெங்கடேசனே
சரணம்
குருநாரதரும் நான்முகனுமிந்திரனும்
விரும்பித்துதித்திடும் திருமாலே கேசவா
தருமநெறி தழைக்க அவதாரம் பல எடுத்த
கருணைக்கடலே திருநாராயணனே
No comments:
Post a Comment