பிரசன்னவெங்கடேசன்
பல்லவி
ஆனந்தமளித்திடும் பிரசன்னவெங்கடேசனை
வையாவூர் தலத்தில் கண்குளிரக் கண்டேன்
அனுபல்லவி
தேனார்மொழியாள் அலமேலுமங்கையின்
திருக்கரம் பற்றிய மாலனைக் கேசவனை
சரணம்
வானுறை தேவரும் நாரதரும் நான்முகனும்
மானிடரும் கருடனும் அனுமனும் பணிந்தேத்தும்
தீனசரண்யனை ஆதிவராகனை
பானு குலத்துதித்த ஶ்ரீராமசந்திரனை
No comments:
Post a Comment