தந்தைக்கோதிய கந்தசாமி
பல்லவி
தந்தைக்கு மந்திரமோதிய தனையனை
கந்தசாமியை வந்தனை புரிந்தேன்
துரிதம்
நந்தியும் கணங்களும் நரர்சுரர் முனிவரும்
இந்திரன் நான்முகன் கரம்பணிந்தேத்தும்
அனுபல்லவி
சந்தக்கவி அருணகிரிநாதர் திருப்புகழில்
சிந்தை குளிரப் பாடிப் பரவிய
சரணம்
மந்த மதியால் தவறுகள் பல செய்து
அந்தகனாயுலகில் வீணில் திரிந்தேன்
நந்தகுமாரன் கேசவன் மருகன்
எந்தனைத்திருத்தி இனிதாட்கொள்ளவே
No comments:
Post a Comment