ஶ்ரீமகாவிஷ்ணு
பல்லவி
ஶ்ரீமகாவிஷ்வை ஆராதனை செய்தேன்
நாமமே போற்றி திருவடி பணிந்து
துரிதம்
பாமரர் பண்டிதர் யோகியர் ஞானியர்
வேதியரனைவரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
ஶ்ரீமகாலஷ்மியை மணிமார்பில் தாங்கும்
பூமிநாதனை கேசவனை மாதவனை
சரணம்
காமனையீன்ற தாமோதரனை
சாமிநாதன் முருகனின் மாமனை
தாமரைப்பதத்தானை ஶ்ரீகோவிந்தனை
தூமலர் தூவி உளமாரப் பணிந்து
No comments:
Post a Comment