மங்களாம்பிகை
பல்லவி
ஒரு கணமேனும் உந்தன் தரிசனம்
கிடைத்திட வேண்டினேன் மங்களாம்பிகே
அனுபல்லவி
உருகி மனமார அனுதினம் துதித்தேன்
கருணைக் கடலே கேசவன் சோதரி
சரணம்
முருகன் கணபதி இருவரைப் போலவே
ஒரு பிள்ளை நானும் நீயறியாயோ
பெருமைக்குரிய வையச்சேரி வளர்
அருமை அன்னையே திருவுளமிரங்காதோ
No comments:
Post a Comment