குறுங்காலீச்வரன் (கோயம்பேடு )
பல்லவி
குறுங்காலீச்வரனை வணங்கித்துதித்தேன்
உறுதுணையவனிரு பதமென நம்பியே
அனுபல்லவி
நறுமணம் தரும் மலர் மாலைகளணிந்த
அறம் வளர்த்த நாயகி திருக்கரம் பற்றிய
சரணம்
துன்பங்கள் தீர்க்கும் தும்பிக்கையானும்
இன்பமளித்திடும் சண்முகநாதனும்
நன்மைகள் புரிந்திடும் கேசவனும் பணியும்
வன்தொண்டன் நேசனை குசலவபுரீசனை
No comments:
Post a Comment