வைகுண்டவாசன் ( கோயம்பேடு)
பல்லவி
கனகவல்லி மனம் மகிழ உடனிருக்கும் கேசவனை
வைகுண்டவாசனை மனமாரத் துதித்தேன்
துரிதம்
சுரபதி ரதிபதி தனங்களின் அதிபதி
பசுபதி கணபதி அனைவரும் போற்றும்
அனுபல்லவி
அனல் புனல் காற்று நிலம் நீள்விசும்பென
அனைத்துமாகி நின்ற அகிலலோகநாயகனை
சரணம்
சனகாதி முனிவரும் நரர் சுரர் நான்முகனும்
அனுமனும் கருடனும் அடிபணிந்தேத்தும்
வனமாலை துளபம் கௌத்துபமணிந்தவனை
அனங்கனையீன்றவனை அனந்தபத்மநாபனை
No comments:
Post a Comment