வையாவூர் ராமச்சந்திரன்
பல்லவி
ஶ்ரீராமச்சந்திரனைப் பிரசன்னவெங்கடேசனை
வையாவூர் தலத்தில் சேவித்து மகிழ்ந்தேன்
அனுபல்லவி
பாரோர் புகழ்ந்தேத்தும் ஆராவமுதனை
தீரா வினை தீர்க்கும் சென்னகேசவனை
சரணம்
திருமகளும் மகிழ்வோடு மணிமார்பில் கொலுவிருக்க
திருப்பாற்கடல் நடுவே பள்ளிகொண்ட திருமாலை
கருமவினைப்பயனால் கட்டுண்ட என்னை
அருள் கூர்ந்து விடுவித்து ஆண்டருள வேண்டுமென
No comments:
Post a Comment