ஆதிவராகமூர்த்தி(வையாவூர் )
பல்லவி
ஆதிவராகமூர்த்தியைப் பணிந்தேன்
திருமலை வையாவூர் திருத்தலத்தில் விளங்கும்
அனுபல்லவி
தீதிலாத் திருமகளை மடிதனில் வைத்திருக்கும்
மாதவனைக் கேசவனை மதுசூதனனை
சரணம்
சோதியாய்ச் சுடராய் திருவோண நந்நாளில்
மேதினி போற்ற ஒளி தரும் தேவனை
வேதியர் துதித்திடும் வேதமுதல்வனை
யாதவ குலத்துதித்த மாயக் கண்ணனை
No comments:
Post a Comment