பார்த்திருந்துமுன்னை.....
பல்லவி
பார்த்திருந்துமுன்னைப் பாராதவன் என்னை
காத்திருந்து காத்தருள் தந்த ஶ்ரீநிவாசா
அனுபல்லவி
பூத்திருந்த தாமரைப் பாதங்களைப் பணிந்தேன்
நீயே கேசவன் மாதவன் கோவிந்தன்
சரணம்
சாற்றியுள்ள மாலையும் சங்கும் சக்கரமும்
போற்றித் துதிக்கும் வண்ணம் வீற்றிருக்குமுன்னழகும்
நேற்றுவரை நினையா பொழுதெல்லாம் வீணே
ஏற்றமிகு இலட்சுமிபுரம் போற்றும் கோபாலா
இராகம் : காந்தாமணி
தாளம் : கண்டசாபு
No comments:
Post a Comment