சக்தி விநாயகனே......
பல்லவி
சக்தி விநாயகனே முக்தியளித்திடுவாய்
பக்தியுடன் துதித்தேன் பக்தனெனைக் காத்து- நவ
அனுபல்லவி
பக்தி வழியன்றி வேறோர் உபாயமிலேன்
இடர்கள் களைந்தருளும் சுடரே ஐங்கரனே
சரணம்
சுத்தியுடன் உனைதினம் பக்தியுடன் தொழுதால்
முக்தியளித்திடும் கேசவன் மருகனே
வித்தகர் போற்றும் உத்தமி புதல்வனே
மயிலாய வீதியையே கயிலாய மெனச்செய்யும்
இராகம் : சக்கரவாகம்
தாளம் : ஆதி
No comments:
Post a Comment